ஜெய்: அஞ்சலி காதலி அல்ல; தோழி

நடிகை அஞ்சலியும் நானும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. உண்மையில் அஞ்சலி என் காதலி அல்ல; அவர் என்றென்றும் என் தோழியே. எங்களின் நட்பு எந்த ஒரு தொய்வும் இன்றி தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் ஜெய். 
 இதுபற்றி செய்தியாளர்களிடம் ஜெய் கூறுகையில்,  “திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்கவே இல்லை. என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். என் வீட்டில் எனது விருப்பமின்றி ஒருபோதும் எனக்கு மணப்பெண் தேடமாட்டார்கள்.
“நான் தற்போது ‘பார்ட்டி’, ‘நீயா 2’, ‘மதுர ராஜா’, ‘கருப்பு நகரம்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறேன். 
“நயன்தாரா, அஞ்சலி உள்ளிட்ட பல நாயகி களுடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். அவர்களுடன் நட்புடனே பழகுகிறேன். 
“தற்போதைக்கு நான் யாரையும் காதலிக்க வில்லை. நடிப்பில் கவனம் செலுத்துவதே என் முதல் வேலையாக உள்ளது. ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தேன். அவர் மிகவும் மென்மையானவர். அவருக்கு ரசிகர் கள் அதிகம். படப்பிடிப்பு நேரத்தில் நிறைய கூட்டம் வந்தாலும் எந்த ஒரு பதற்றமும் இன்றி மென்மையாக எல்லோரிடமும் பழகுவார்.  மலையாளத்தில் உருவாகும் ‘மதுரராஜா’ படத்தில் மம்முட்டி தம்பியாக நடிக்கிறேன். இப்படத்தில் சன்னி லியோனுடன் மீண்டும் நடனமாடியுள்ளேன்,” என்கிறார்  ஜெய்.