பிறந்தநாளை இளநீர் கொடுத்து கொண்டாடிய ஆரி

முன்னணி நாயகன்களாக வலம் வரும் நாய கர்களில் ஒருசிலர் சமூகம் பற்றி அவ்வள வாக சிந்திப்பதில்லை. தங்களுடைய சுய விளம்பரத்துக்காக அவ்வப்போது பிரச்சினை களில் சிக்கும் நாயகர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட நாயகர்களுக்கு மத்தியில் படங்களில் நடிப்பதுடன் பல்வேறு சமூகசேவை களிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் ஆரி.
இந்த சமூக சேவைகளுள் முக்கியமாக ‘இயற்கை விவசாயம்’ குறித்து பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துவருகிறார் ஆரி. 
காதலின் உயர்வைக் கூறும் கதையாக உருவாகிவரும் ‘அலேகா’ படத்தின் படப் பிடிப்பு கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் நடிக்கும் ஆரியின் பிறந்தநாளைக் கடந்த 12ஆம் தேதி கொண் டாட விரும்பிய படக்குழுவினர் பெரிய கேக் ஒன்றை வெட்டுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்நிலையில் இயற்கை உணவு குறித்து பேசிவரும் ஆரி, ‘கேக்’ என்பது இயற்கை உணவில்லை என்பதால் அதை வெட்டு வதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, படப்பிடிப் பில் இருந்த அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்தநாளைக் கொண் டாடியுள்ளார். ஆரியின் இச்செயலைப் பார்த்து படக்குழுவினர் வியந்துபோனார்களாம்.