அன்பர் தினமான நேற்று   உறுதியானது திருமணம்

சிலரின் காதல் திருமணத்தில் முடியும். சிலர் பலவித பிரச்சினைகளாலும் காதலைத் துறந்து பிரிந்துவிடுவர். சிலர் எத்தனை பிரச்சினைகள் தொடர்ந்தாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து திருமணத்தில் கைகோர்ப்பர். 
இதுபோல் இப்போது  மீண்டும் ஒரு திரையுலக ஜோடியினர் மார்ச் மாதத்தில் திருமணம் செய்ய உள்ளதாக காதலர் தின மான நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 
‘கஜினிகாந்த்’ படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்துள்ளதாக ஆர்யா கூறியுள் ளார்.

இப்படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக வும் கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘எங்க வீட்டு மாப் பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தற்போது ஆர்யாவின் திரு மணம் உறுதியாகியுள்ளது. 
இதற்குமுன் ஆர்யாவின் நண்பரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது திருமணம் குறித்து அறிவித்தார்.

இந்நிலையில், காதலர் தின மான நேற்று ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாயிஷாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
இதேபோன்று சாயிஷாவும் டுவிட்டர் பக்கத்தில் தனது திருமணம் குறித்து கூறியுள்ளார். இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், திருமணத் தேதியை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருமணத்திற்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து வாழ்த்து கூறுவர் என்பதால், இதை பிரம்மாண்டமான திருவிழா வாக நடத்துவதற்கு  ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.