‘பாரிஸ் பாரிஸ்’

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பாரிஸ் பாரிஸ்’. இந்தியில் வெளியான ‘குயின்’ படத்தை தமிழில் மறுபதிப்பு செய்கின்றனர். ஒரே சமயத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், விரைவில் திரை காண உள்ளது. முதற்கட்ட படப் பிடிப்பு தமிழகத்தில் உள்ள விருதுநகர் பகுதியிலும் இதர காட்சிகளை பாரிஸ், பார்சிலோனா, லண்டன் உள்ளிட்ட இடங்களிலும் நடத்தி உள்ளனர். “இப்படத்தின் இந்திப் பதிப்பை வெகுவாக ரசித்துப் பார்த்தேன். தமிழிலும் அதேபோன்று தரமான படைப்பை, நடிப்பை தரமுடியும் என நம்புகிறேன். இப்படம் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்,” என்கிறார் காஜல்.