துல்கர் படத்தில் பிரியா பவானிசங்கர்

திரையுலகில் அறிமுகமான வேகத்தில் பல படங்களில் ஒப்பந்தமாகி பிரபலமாகி வருகிறார் பிரியா பவானி சங்கர். 
‘மேயாத மான்’ மூலம் அறி முகப் படத்திலேயே கச்சிதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவருக்குக் கார்த்தியுடன் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. 
இதையடுத்து ஜீவா, அருள்நிதி படங்களிலும் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் பிரியாதான் கதாநாயகியாம். 
ரா.கார்த்திக் இயக்கும் இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
“துல்கர் சல்மான் திறமையான இளம் நாயகர்களில் ஒருவர். அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
“எனக்கான கதாபாத்திரம் மனதுக்குப் பிடித்தமானதாக அமைந்துள் ளது. எனவே உற்சாகமாக நடிப்பேன்,” என நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் பவானி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் எனத் தகவல்.

Loading...
Load next