உறவினரை காதலித்து மணந்த மதுமிதா

பிரபல நகைச்சுவை நடிகை மதுமிதா வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்டுள்ளது. 
பல படங்களில் நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்த மதுவும் உதவி இயக்குநர் மோசஸ் ஜோயலும் வாழ்க்கையில் இணைந்துள்ளனர். 
உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் ‘ஜாங்கிரி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மதுமிதா. அண்மையில் வெளியான ‘விஸ்வாசம்’ வரை பல படங்களில் நடித்து நகைச்சுவையில் தனி முத்திரை பதித்துள்ளார். 

அதிலும் இவரும் சந்தானமும்  இணைந்து நடித்துள்ள காட்சிகளைத் திரையில் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.
இந்நிலையில் தனது உறவினரான மோசஸ் ஜோயலுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ள நிலையில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்புள்ளிகள் பலரும் புதுமணத் தம்பதியரை வாழ்த்தியுள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகும் மதுமிதா தொடர்ந்து நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.