அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி

நடிகர்கள் பலருக்கும் அரசியல்வாதியாக நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் பிடித்தமான ஒன்றுதான் போலும். எல்லா நடிகர்களும் அரசியல்வாதிகளாக நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக ‘எமன்’ படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்த விஜய் ஆண்டனி, மீண்டும் இப்போது புதுப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  
‘பிச்சைக்காரன்’ படத்தில் தனது அதிரடி நடிப்பின் மூலம் தாய்மார்களின் இதய சிம்மாசனத்தில் இன்றளவும் தனக்கென்று ஒரு அசைக்கமுடியாத இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி. இவர், ‘சலீம்’ படம் முதல் ‘திமிரு புடிச்சவன்’ படம் வரை தொடர்ந்து தனது சொந்தப் படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றிபெற்றன. அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியைச் சந்திக்க,  சொந்தப்படம் தயாரிக்கும் முயற்சியைக் கைவிட்டு மற்ற தயா ரிப்பாளர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
அம்மா க்ரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்திலும் முன்னாள் பெப்சி தலைவர் ஜி. சிவா தயாரிப்பில் ஒரு படத் திலும் நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்து ‘ஆள்’, ‘மெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் கதிர் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை ‘செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் டிடி ராஜா தயாரித்து வருகிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.
இதை அடுத்து, விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை டிடி ராஜா தயாரிக்கிறார். அரசியல் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாக உள்ளது. 
இப்போது ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ உள் ளிட்ட படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி படத்துக்கு மூன்று கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல்.
 ‘திமிரு புடிச்சவன்’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக ‘கொலை காரன்’ படம் வெளியீடாக உள்ளது. 
இந்நிலையில், தனது புதிய படம் குறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கப் பதிவில்,  எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்கு நர் ஆனந்தகிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டிடி ராஜா இந்தப் படத்தைத் தயா ரிக்கிறார். இந்தப் படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல் கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.