முதல்வரின் மகன் நிகில் நடித்துள்ள படம் இணையத்தில் வெளியீடு; போலிசில் புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார் நடித்துள்ள கன்னடப்படம் ‘சீதராமா கல் யாணா’. அண்மையில் திரைக்கு வந்த இந்தப் படத்தைத் திரையரங் கில் பார்த்த ஒருவர் அதை காணொளியாக எடுத்து இணை யத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 
இதுகுறித்து படத் தயாரிப்பா ளர் போலிசில் புகார் செய்துள்ளார். 
படத்தை வெளியிட்டவர்களை பிடிப்பதற்கு இணையக் குற்றவியல் போலிசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
இப்படத்தில் நிகில் குமார் ஜோடியாக ரச்சிதா ராம் நடித் துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
இப்படத்தை குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி தயாரிக்க, ஹரிஷா என்பவர் இயக்கியிருந்தார். 
அனிதா குமாரசாமி போலிசில் அளித்துள்ள புகாரில், “சீதராமா கல்யாணா படத்துக்குக் கோடிக் கணக்கில் செலவு செய்து தயாரித் தேன்.  ஏராளமான தொழிலாளர் களின் உழைப்பும் இப்படத்தில் இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பைச் சுரண்டும் விதத்தில் யாரோ திருட்டுத்தனமாக இந்தப் படத்தைத் திரையரங்கில் கைபேசி யில் படம் எடுத்து, முழுப் படத் தையும் இணையத்தில்  பதிவேற்றி உள்ளனர். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து, கடுமையாகத்  தண்டிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.