‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் வெளியீடு

பல ஆண்டுகளாக தயாரிப்புப் பணியில் இருந்து வந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் தணிக்கைக்குச் சென்று இப்போது சான்றிதழ் பெற்றுவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் டுவிட்டரில் தகவல் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். படத்தை என்டர் டெயின்மென்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறு வனம் இணைந்து தயாரித்துள்ளன.
விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்