ஆர்யா முடிவில்தான் சாயிஷா நடிப்புலகம் 

தமிழ்த் திரையுலகப் பிரபலங்களான ஆர்யாவும் சாயிஷாவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ள பூரிப்புடன் காணப்படுகின்றனர். ஆர்யாவின் திரையுலகப் பயணம் எந்த வொரு தடையுமின்றி தொடரும் என்று கூறி னாலும், சாயிஷாவின் திரைப்பயணம் திருமணத்துக்குப் பின் என்னவாகுமோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
ஒரு நடிகைக்குத் திருமணம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனே, தொடர்ந்து அவர் நடிப்பாரா அல்லது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவாரா என்ற கேள்வியும் சேர்ந்தே எழும்.
சில நடிகைகள் திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறிவிட்டு, நடிப்புலகில் இருந்து சற்று காலம் வரை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவர். ஒருசிலர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவர். 
இப்படி திருமணமான நடிகைகளின் பட்டியலில் மீனா, தேவயானி, ஜோதிகா, அமலாபால், சிம்ரன் உட்பட பல நடிகைகள் உள்ளனர். இவர்களில் பலர் நடிக்கின்றனர். சிலர் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டனர். 
இப்போது திருமணமான நடிகைகளின் வரிசையில் சாயிஷாவும் சேரவுள்ளார்.  

கடந்த சில வாரங்களாக வதந்தியாகப் பரவி வந்த ஆர்யா, சாயிஷா திருமணத் தகவல் தற்போது உண்மையாகி உள்ளது. 
அழகும் திறமையும் குறிப்பாக நடனமாடுவதில் அசாத்திய திறமையும் கொண்ட சாயிஷா திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என்றே திரையுலகத்தில் பேசிக்கொள்கின்றனர். 
ஆர்யாவின் குடும்பம் திரையுலகப் பின்னணியைக் கொண்ட குடும்பம் இல்லை. அவர்கள் மலையாள முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சாயிஷா மகாராஷ்டிரா முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பப் பின்னணி காரணமாகத் தொடர்ந்து சாயிஷா நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

திருமணத்திற்குப்பின் சாயிஷா நடிப்பாரா இல்லையா என்பதை அவரோ அல்லது அவரது வருங்காலக் கணவரான ஆர்யாவோதான் தெரிவிக்க வேண்டும் என்று ஊடகங்கள் பலவும் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, ஆர்யா-சாயிஷா திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் இருவீட்டாரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றும் சாயி ஷாவின் அம்மா கூறியுள்ளார். 
தமிழ் சினிமாவின் முன் னணி நாயகர்களுள் ஆர்யாவும் ஒருவர். பூஜா, நயன்தாரா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப் பட்ட ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் நீண்டகாலமாகப் பெண் பார்த்து வந்தனர்.
ஆர்யா தன்னுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் காதலர் தினத் தன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதை சாயிஷாவும் உறுதிப்படுத்தினார். 

இதுகுறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹீனியிடம் கேட்ட போது, “எங்களுக்கு இந்த திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும் ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்விதமாக அவரது டுவிட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்திருப்பார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவுதான்.
“ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினார்கள். எங்களுக்கும் ஆர்யா போன்ற ஒருவர் மாப்பிள்ளையாகக்  கிடைத்ததில் மகிழ்ச்சி யாக உள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் அனைவரும் அதற்கான வேலை களில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார். சாயிஷா பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாரின் பேத்தி ஆவார்.