மீண்டும் நாயகனாக களமிறங்கும் இயக்குநர் சேரன்

சில பிரச்சினைகளை வெற்றிகர மாகக் கடந்து வந்த பின்னர் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார் சேரன். 
ஒருபக்கம் ‘திருமணம்’ என்ற தலைப்பில் புதுப் படத்தை இயக்கி வருபவர், ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்தும் உள்ளார். இது விரைவில் திரை காண உள்ளது. 
இது திகில் நிறைந்த உணர்வு  பூர்வமான படமாம். சாய்ராஜ்குமார் இயக்கி உள்ளார். இவர் அறிமுக இயக்குநர் அல்ல. ஏற்கெனவே ஜெயம் ரவியை வைத்து ‘மழை’ என்ற படத்தை இயக்கியவர். 
ராஜ்குமார் என்ற பெயரைத் தற்போது சாய்ராஜ்குமார் என்று மாற்றிக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ளார்.

“இப்படத்துக்கான கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும்? என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன். காரணம், சில விஷயங்களை சிலர் சொன் னால்தான் அது சேர வேண்டிய இடத்திற்கு சரியாகச் சென்று சேரும். 
“இதில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கியப் பிரச்சினையை மத்திம வயதில் உள்ள, அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொது மக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம். அந்த வகையில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

“இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் இதுவரை யாராலும் சொல் லப்படாத ஒரு கோணத்தில் சொல் லப்படுகிறது. இதில், தான் ஏற் றுள்ள கதாபாத்திரத்துக்காக தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார் சேரன். 
“தலைப்புக்கேற்ப ராஜாவுக்கு ‘செக்’ வைக்கும் ராணிகளாக மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சரயு மோகன், நந்தனா வர்மா நடித்துள்ளனர். சிருஷ்டி டாங்கே வும் முக்கிய வேடத்தை ஏற்றுள் ளார். ‘சுண்டாட்டம்’ இர்ஃபான் வில்லனாக நடித்துள்ளார். 
“தெலுங்குத் திரையுலகில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா இப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறி முகமாகிறார்,” என்கிறார் இயக்கு நர் சாய் ராஜ்குமார். 
உணர்வுபூர்வமான படம் என் றாலும் தேவைப்படும் இடங்களில் சண்டைக் காட்சிகளும் உள்ளன வாம். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 

“இது துரித உணவுக்கு வர வேற்பு உள்ள காலம். எனவே அதை மனதிற்கொண்டு காலத் திற்கேற்ற விறுவிறுப்பான படத்தை ரசிகர்களுக்கு அளிக்கப்போகி றோம். இந்தப் படத்துக்காக சேரன் உள்ளிட்ட அனைவருமே மிகுந்த முயற்சி மேற்கொண்டனர்.
“நல்ல கதைகள் மட்டுமே இப்படி மெனக்கெட வைக்கும். இதனால்தான் ஒட்டுமொத்தப் படக்குழுவும் கச்சிதமாக செயல் பட்டு கடுமையான உழைப்பைத் தந்து இந்தப் படத்தின் உருவாக் கத்தில் துணை நின்றதாக நம்பு கிறேன்.
“எனவே எங்கள் உழைப்பு வீண் போகாத வகையில் இப்படம் வெற்றி காணும்,” என்கிறார் இயக்குநர்.