பேரரசு: தயாரிப்பாளரிடம் கதை சொல்லாமல் இருப்பது தவறு

வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படம் ஒன்றை இயக்குகிறார் கிருஷ்ணகுமார். இதில் கிரி‌ஷிக், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட், டெல்லி கணேஷ், அபினவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நிகழ்வில் பேசிய பேரரசு, ஒரு தயாரிப்பாளரின் சூழல் அறிந்து இயக்குநர்கள் படம் எடுக்க வேண்டும் என்றார். “இல்லையெனில் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சல் நிச்சயமாக அந்த இயக்குநரை நிம்மதியாக வாழ
விடாது. வெற்றி, புகழ் எல்லாம் தற்காலிகம் தான். இந்த விழாவிற்கு அழைத்தபோது படத்தின் தலைப்பை கேட்டு கொஞ்சம் தயங்கினேன். படத்தின் கதை வேறு மாதிரி இருக்குமோ என விசாரித்தபோது கதையைச் சொன்னார் இயக்குநர். பிறகே வருவதற்கு சம்மதித்தேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதன் கதை என்ன என்பதை சொல்ல பல இயக்குநர்கள் மறுக்கிறார்கள். அது தவறு,” என்றார் பேரரசு.