ஐஸ்வர்யா: என் காதலர் தேடி வருவார்

காதல் விவகாரத்தில் தமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனது வாழ்வில் இதுவரை காதல் என்பது தோல்வியில் மட்டுமே முடிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என பெயர் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா. அதே போல் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் திறமைசாலி என்றும் அவருக்கு பெயர் கிடைத்துள்ளது.
‘கனா’ படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷைத் தேடி நல்ல நல்ல வேடங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் வருகின்றன. 
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தமது காதல் அனுபவங்கள் குறித்து அவர் மனம்திறந்து பேசியுள்ளார். 12ஆம் வகுப்பு படித்தபோதே காதல் அவர் வாழ்வில் குறுக்கிட்டதாம். ஆனால், அது கசப்பான அனுபவத்தையே தந்துள்ளது.
“நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. காதலைப் பொறுத்தவரை நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். என் முதல் காதல் தோல்வி பள்ளியில் படித்தபோதே வாழ்க்கையில் குறுக்கிட்டது. என்னு டைய தோழியே என் காதலனுடன் சேர்ந்துகொண்டு என்னை ஏமாற்றினாள்,” என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் காதல் மலர்ந்ததாம். ஆனால் காதலித்தவரை விட்டு விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

“நான் மிகவும் உணர்வுப்பூர்வமானவள். ஒருவருடன் காதலில் இருக்கும்போது அந்த காதல் முடிந்துவிடக் கூடாது என்று மனதார நினைப்பேன். ஆனால், என் துரதிர்ஷ்டம் என்னுடைய காதல் எல்லாமே தோல்வியில்தான் முடிந் தது,” என்று சோகத்துடன் சொல்லும் ஐஸ்வர்யா, தற்போது பணியில் மட்டுமே கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார்.
ஒரு நடிகையாக இருந்துகொண்டு காதலிப்பது மிகவும் சிரமம் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் மிக அவசியமான ஒன்று என்கிறார்.
காதல் ஜோடிகளைப் பார்க் கும்போது அவர்களது அன் யோன்யமும் நெருக்கமும் தமக்கு மகிழ்ச்சி தரும் என் றும் காதலர்கள் ஒரு வருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
“நான் யாரையும் இப்போது காதலிக்கவில்லை என்பதே உண்மை. அதே சமயம் எனக்கான ஒரு காதலர் இருப்பார் என உறுதியாக நம்புகிறேன். அந்தக் காதல ருக்காக காத்துக்கொண்டி ருக்கிறேன். அப்படி ஒருவர் நிச்சயம் என்னைத் தேடி வருவார்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.