சாந்தினிக்கு வாழ்க்கை இனிக்கிறதாம்

திருமணமானால் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும், கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறப்படுவதை பொய்யாக்கி உள்ளார் சாந்தினி.
‘சித்து +2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், திருமணத்துக்குப் பிறகும் பத்து படங் களில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
காதலித்தவரைக் கைப்பிடித்த பிறகுதான் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார். கணவர் தனக்கு நிறைய சுதந்திரம் அளித்திருப்பதாகவும் அவரைப் போன்ற வாழ்க் கைத்துணை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் மெச்சிக்கொள்கிறார் சாந்தினி.
“சில சமயங்களில் நமக்கு திருமணம் ஆகி விட்டதா என்று எனக்கே சந்தேகம் வந்து விடுகி றது. அந்தளவு எனது காதல் கணவர் சுதந்திரம் அளித்துள்ளார். இதனால் திருமணமாகிவிட்டது என்பதே மறந்துவிடுகிறது.
“தேனிலவுக்காக பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து என பல நாடுகளுக்குச் சென்று வந்தோம். புத்தாண்டு அன்று பாரிஸ் நகரில் இருந்தது மறக்க முடியாத இனிய அனுபவம். டிஸ்னி லேண்டில் நடந்த புத்தாண்டுக் கொண் டாட்டத்தையும் மறக்க இயலாது.

“பெல்ஜியம் அமைதியான இடம். நிறைய சாக்லேட்டுகளையும் வாங்கினோம். ஆம்ஸ்டர்       டாம் நகரம் மிக அழகானது. அங்கு பேருந்து, டிராம், டாக்சி என்று எல்லாவற்றிலும் ஏறி ஊரைச் சுற்றினோம். 
“எப்போதும் படப்பிடிப்பு, குரல்பதிவு என்று இடைவிடாத வேலையில் மூழ்கியிருப்பேன். அப்படிப்பட்ட எனக்கு தேனிலவு ஓய்வையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது,” என்று சொல்லும் சாந்தினி, தனது கணவர் நந்தாவை ஒன்பது ஆண்டுகள் காதலித்தாராம்.

காதலித்தபோது காட்டிய அக்கறையைவிட, திருமணத்துக்குப்பின் அதிக பாசத்தைக் காட்டுகிறாராம் கணவர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது சிரமமான விஷயம் என்று பலரும் சாந்தினியிடம் கூறியுள்ளனர். ஆனால் அப்படி   யொரு நிலை தமக்கு ஏற்படவில்லை என்கிறார்.
“எங்களைப் பொறுத்தவரை எல்லாமே சுமுகமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் குடும்ப நிர்வாகம் திட்டமிடலோடு நடக்கிறது. நான் செல்லமாக வளர்ந்த பெண். அம்மா, அப்பா இடத்தில் இருந்து என்னை கண வர்தான் கண்கலங்காமல் பார்த்துக்கொள்கி றார். நல்ல கணவர் அமைந்ததால் இல்லற வாழ்வின் இனிமையை ரசித்துக்கொண்டி ருக்கிறேன்,” என நெகிழ்கிறார் சாந்தினி.
திருமணம் நடந்த அடுத்த நாளே படப்பிடிப்பில் பங்கேற்றாராம். வழக்கம் போல் நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகத்தில் மிதக்கிறார்.