சிவாவுடன் மோதுகிறார் நயன்தாரா

‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்.
சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அண்மையில் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டனர். ஒரே நாளில் பல லட்சம் பேர் இதைக் கண்டு ரசித்துள்ளனர்.
முன்னோட்டத்தில், ‘லோக்கலான பசங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது’ என்று நயன்தாரா பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த வசனத்தைக் குறிப்பிட்டு நயன்தாராவின் நடிப்பை பலர் பாராட்டியுள்ளனர்.
சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாராம் எம்.ராஜேஷ். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.