அரசியல் பிரமுகரை நினைத்து கண்கலங்கிய ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித் துள்ள ‘எல்.கே.ஜி’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவரது ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இப்படத்தில் நடித்துள்ள அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் குறித்து சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் லேசாகக் கண்கலங்கினார்.
“நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரைச் சந்திக்க நேரில் சென்றேன். சென்னை பட்டினப் பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீடு 600 சதுர அடி மட்டுமே கொண்டது. வீட்டைப் பார்த்தபோது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“அவரிடம் கதையைச் சொல்லி முடித்ததும் எனக்குத் தந்தையாக நடிக்க முடியுமா? என்று கேட்டேன். ஒரு நிமிடம் யோசித்தவர், ‘சரி நடிக்கிறேன்... எனது மகனின் கல் லூரி கல்விக் கட்டணத்தைச் செலுத்து வீர்களா?’ என்று கேட்டார்.
“நாற்பது ஆண்டுகள் அரசியலில் இருக்கும் பிரமுகர் இவர். பல அரசியல் வாதிகள் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் சம்பத் சாரோ தன் மகனுக்கு கல்லூரிக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.
“இதை நினைத்தபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. படத்தில் அவருக்கு எதிர்மறை வேடம் தான் கொடுத்திருந்தோம். ஆனால், அவருடைய உண்மையான குணம், நல்ல மனம் குறித்து தெரிய வந்ததும் அதைப் போன்றே கதாபாத்திரத்தையும் மாற்றி அமைத்தோம்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஆர்.ஜே.பாலாஜி.
தற்போது சிவகார்த்திகேயன் படத் திலும் நடிக்கிறாராம் நாஞ்சில் சம்பத். அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் பாலாஜி மேலும் குறிப்பிட்டார்.