அரசியல் வசனம் பேசியுள்ள பிரியா

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை பிரியா ஆனந்த். 
‘எல்.கே.ஜி.’ படத்தில் தாம் ஏற்றுள்ள கதாபாத்திரம், பணியிடங்களில் பெண்கள் எப்படி அசத்திக் கொண் டிருக்கிறார்கள் என்பதை கச்சிதமாக வெளிப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
“பெண்கள் மீது மரியாதை வைத்துள்ள பாலாஜி, அவர் களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் தருகிறார். இந்தப் படத்தில் எனக்கு மரியாதைக்குரிய கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது வெறும் நகைச்சுவைப் படம் மட்டுமல்ல. நல்ல பொழுதுபோக்கு சித்திரமாகவும் உருவாகி உள்ளது.
“இப்படத்துக்காக நான் பேசியுள்ள அரசியல் வசனங்களுக் கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. நூற்றுக்கு நூறு விழுக்காடு பாலாஜிதான் பொறுப்பு,” என்கிறார் பிரியா ஆனந்த்.