ஷ்ரிதா சிவதாஸ்: பிறரது விவகாரங்களில் மூக்கை நுழைப்பது அறவே பிடிக்காது

‘தில்லுக்குத் துட்டு’ இரண்டாம் பாகத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி இருக்கிறார் ஷ்ரிதா சிவதாஸ். 
பார்ப்பதற்கு முன்னாள் நடிகை ராதாவைப் போல் காட்சியளிப்பவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். 6 ஆண்டு  களுக்கு முன்பே நடிகையாகி விட்டாலும் இப்போதுதான் தமிழில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 
ஷ்ரிதாவின் சொந்த ஊர் கேரள மாநி லம் எர்ணாவூர். பள்ளியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பு தேடி வந்ததாம். அப்போது ஆர்வமில்லாததால் நடிக்க மறுத்து விட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுப்பதில் ஆர்வமாக இருந்த வருக்குக் குடும்பத்தா ரின் ஆதரவும் இருந் துள்ளது. 
அதனால்தான் மீண்டும் சினிமா வாய்ப்புத் தேடிவந்த போது மறுக்காமல் ஏற்றுக் கொண்டாராம். 
“மலையாளத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்துவிட் டேன். தமிழில் ஒரு புதுப்படத்துக்கு நாயகி தேவை என்று கேள்விப்பட்டபோது முயற்சித்துப் பார்க்க லாமே என்று தோன்றி யது.
“உண்மையில் நான் சந்தானம் சாரின் தீவிர ரசிகை. அவர் நடித்த பல படங்களைப் பார்த்தி ருக்கிறேன். அவரது நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும். பல தொலைக்காட்சி அலை வரிசைகளில் அவரது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பேன். 
“மற்றவர்களை இடைவிடாமல் சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்தவர் அவர். ‘தில்லுக்குத் துட்டு-2’ படத்துக்கு என்னைத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை. எனினும் கதைப்படி நாயகிக்கான கதாபாத்திரத்தில் மலையாளப் பெண்தான் நடிக்க முடியும் என்று கேள்விப்பட்டேன். அதனால் மனதில் லேசாக ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. எனது அதிர்ஷ்டம் அந்த வேடத்துக்கு நான் பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்துவிட்டனர். தமிழில் முதல் படத்தி லேயே சந்தானத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்கிறார் ஷ்ரிதா. 
முதற்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடை பெற்றதாம். அதனால் வேறு மொழி படத்தில் நடிக் கிறோம் என்று கூட தோன்றவில்லை என்கிறார். 
படக்குழுவினர் தன் மீது காண்பித்த அன்பை மறக்க இயலாது என்றும் அனைவரும் குடும்பம் போல் பழகியதாகவும் நெகிழ்கிறார் ஷ்ரிதா.
“இயக்குநர் ராம்பாலா சாரும் எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பொறுமையாக விவரித்தார். ஒரு நகைச்சுவை நடிகரால் கதாநாயகனாக வளர முடியும் என்ப தற்கு சந்தானம்தான் சிறந்த உதாரணம். அவர் பழகுவதற்கு இனிமையானவர். மிகவும் எளிமை யாகப் பேசிப் பழகுவதுடன் எப்போதும் அமைதியாக இருப்பார். இப்படியொரு நல்ல நடிகரைப் பார்த்த தில்லை,” என்று சொல்லும் ஷ்ரிதாவுக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பமாம்.
தமிழ்ச் சினிமாவில் இளம் படைப்பாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடு பவர், இந்தியாவின் ஒட்டுமொத்த கவனமும் தமிழ்ச் சினிமா மீதுதான் பதிந்துள்ளது என்கிறார். 
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்பவர், ‘பாகுபலி’ அனுஷ்கா, ‘36 வயதினிலே’ ஜோதிகா ஆகிய இருவரும் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்ப
தாகக் குறிப்பிடுகிறார்.
பிறரது விவகாரங்களில் மூக்கை நுழைப்பது அறவே பிடிக்காதாம்.
2019-02-20 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்