திருமணம் ஆகவில்லை எனப் புலம்பும் அதிதி

இளம் நாயகன் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் காவல்துறையில் புகார் அளித்தி ருப்பது கோடம்பாக்க வட்டாரங்க ளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தம்மைத் திருமணம் செய்த தாக அபி சரவணன் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகச் சாடியுள்ளார் அதிதி. 
தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும்  இளம் நாயகர்களில் அபி சரவணனும் ஒருவர். திரைப்படங் களில் நடிப்பதோடு பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள் ளார். ‘பட்டதாரி’ படத்தில் இவரது ஜோடியாக நடித்திருந்தார் அதிதி மேனன். 
இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் நெருங்கிப் பழ கினர். அப்போது காதல் மலர்ந்த தாகக் கூறப்பட்டது. எனினும் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. 
இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திடீரென வந்த அதிதி, அங்கு அதிகாரிகளைச் சந்தித்து அபி சரவணன் மீது புகார் தெரிவித் தார். இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், அபி சரவணன் குறித்து சரமாரியாகப் புகார்களை அடுக்கினார்.
“நாங்கள் இருவரும் ‘பட்ட தாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது எங்களுக் குள் காதல் மலர்ந்தது உண்மை தான். ஆனால் அபி சரவணனின் சில செயல்பாடுகள் சரியாக இல்லை. எனவே சில மாதங்களில் நாங்கள் இருவரும் பிரிந்துவிட் டோம்,” என்றார் அதிதி. 
அதனால் சரவணன் தம்மைப் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும், தம்மைப் பற்றிப் பொய்ப் புகார்களைப் பரப்பி வருவதாகவும் அதிதி சாடி னார். தாம் அவரைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணன் ஆதாரமின்றி கூறுவதாகவும் இது தொடர்பாக போலி ஆவணங்களைத் தயா ரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 
“அபி சரவணன் என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் அதிதி.

Loading...
Load next