லாரன்ஸ்: ரஜினிகாந்த் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்

இந்த உலகத்தில் தமக்குப் பிடித்த மான நபர் என்றால் அது தனது தாய்தான் என்றும், அவருக்கு அடுத்தபடியாக ரஜினி சாரைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்றும் கூறி யுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். 
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ரஜினி யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார் என்றும், யார் குறித்தும் தவறாகப் பேசமாட்டார் என்றும் பாராட்டினார். 
“ரஜினி என்னை ஏமாற்றிவிட்டார் என்றோ, துரோகம் செய்தார் என்றோ யாராலும் சொல்ல முடியாது. ரஜினி சார் குறித்து சிலர் தவறாகப் பேசுவதையும் விமர்சிப்பதையும் அவ ரிடம் சொல்லியிருக்கிறேன். அதை யெல்லாம் கேட்ட பிறகு, ‘விட்டுத் தள்ளுங்க தம்பி. ஆண்டவன் பார்த்துக்கொள்வார்’ என்று பதில் அளிப்பார் ரஜினி. 
“என்னைப் பொறுத்தவரை எதி ரிக்கும் உதவும் ஒரு மனிதன் இருப்பார் என்றால் அது ரஜினிதான். 
“எப்போதுமே தனது ரசிகர்களிடம் முதலில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்றும், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரஜினி அடிக்கடி சொல்வார்.
“அவர் சொல்வதைக் கேட்டு ரசி கர்கள் செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாம் சரியாக நடந்து முடியும்,” என்று லாரன்ஸ் கூறியபோது பலத்த கைத்தட்டல் எழுந்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

 ‘ரீல்’ படத்தில் கேரளாவைச் சேர்ந்த உதயராஜ், அவந்திகா. படம்: ஊடகம்

23 Aug 2019

‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அமைந்தது’

‘கர்ஜனை’ முன்னோட்டத் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என திரிஷா கேட்டுக்கொள்ள மறுக்காமல் உதவியுள்ளார் விஜய் சேதுபதி. படம்: ஊடகம்

23 Aug 2019

திரிஷாவுக்கு உதவிய சேதுபதி