விஜய் சேதுபதி, காயத்ரி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘மாமனிதன்’.

விஜய் சேதுபதி, காயத்ரி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘மாமனிதன்’. இதை சீனு ராமசாமி இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இளையராஜா தனது இரு மகன்களுடன் சேர்ந்து இசையமைக்கிறார். வழக்கம்போல் இதிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம் விஜய் சேதுபதி. அதனால் படத்தின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி நம்பிக்கையுடன் சொல்கிறார். ‘மாமனிதன்’ வெளி யான பிறகு இனி தாம் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது என்று விஜய் சேதுபதி முடிவெடுத்தி ருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.