‘இது சுயநலம் மிகுந்த உலகம்’

தனது செல்லப் பிராணிக்கு ‘வின்டர்’ எனப் பெயர் சூட்டியுள்ளார் அமலாபால். படப்பிடிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும்போது செல்லப் பிராணியை உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை என்று கவலைப்படுகிறார். 
இயக்குநர் ஏ.எல். விஜய் - அமலாபால் இருவரும் காதலித்து மணம் புரிந்தனர். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 
இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அமலா, விரைவில் இரண்டாவது திருமணத்துக்குத் தயாராவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், தான் யாரையும் காதலிக்கவில்லை என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். 
தனது இரண்டாவது திருமணம் குறித்து பெற்றோர்தான் முடிவெடுப்பார்கள் என்றும், அதில் தாம் தலையிடப்போவதில்லை என்றும் அமலா கூறியுள்ளார். 

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தாம் செல்லமாக வளர்க்கும் வின்டர் நாய்க்குட்டியுடன்தான் பொழுதைக் கழிக்கிறாராம் அமலா. படப்பிடிப்புக்காக வெளியிடம் செல்லும்போது நாய்க்குட்டி நினைவாகவே இருப்பதாகப் புலம்புகிறார். 
“இது சுயநலம் மிகுந்த உலகம். அதேசமயம் இங்கு சுயநலம் இல்லாமலும் வாழ முடியும். சுயநலமின்றி எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழ முடியும் என்பதைச் சுயநலவாதிகளுக்கு இந்தச் செல்ல நாய்க்குட்டி பாடமாகக் கற்றுத் தரும்,” என்று சமூக வலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார் அமலா.
தற்போது ‘ஆடை’, ‘அதோ அந்த பறவை போல’ ஆகிய இரு தமிழ்ப் படங்களிலும், தெலுங் கில் இரண்டு படங்களிலும், மலை யாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அமலா பால்.
படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் அமலாவின் முழுக் கவனமும் தனது வேலையில் மட்டுமே குவிந்திருக்கும் என்று சகக் கலைஞர்கள் பாராட்டுகின்றனர்.

“ஒவ்வொருவருக்கும் தனிப் பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள், சங்கடங்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம தலையில் ஏற்றிக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தால் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்த இயலாது.
“எனவே தான் படப்பிடிப்பில் பங்கேற்கும் போது படம் பற்றி மட்டுமே பேசுவேன். இதர விஷ யங்களில் ஆர்வம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டேன். இதனால் தான் நல்ல நடிகை என பெயரெடுக்க முடிந்தது,” என்கிறார் அமலா பால்.
இவர் நடிப்பில் உருவாகும் ‘ஆடை’ படத்துக்கு விநியோகிப்பாளர் மத்தியில் இப்போதே நல்ல வர வேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் உற்சாகத்தில் மிதக்கிறார் அமலா.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்