இடைவெளி இன்றி நடித்து படங்களை முடிக்கும் சாயிஷா

விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் கைவசம் உள்ள படங்களை வேகமாக முடித்து வருகிறார் இளம் நாயகி சாயிஷா. 
தற்போது சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருபவர், ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் படப்பிடிப்புகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளாராம்.
‘காப்பான்’ படத்துக்கான பாடல் காட்சியை அமெரிக்காவில் படமாக்க உள்ளனர். இதற்காக விரைவில் அங்கு செல்ல இருக்கிறார் சாயிஷா. 
அத்துடன் இந்தப் படத்துக்கான அவரது பகுதி முடிந்துவிடும் எனத் தகவல். சாயிஷா கைவசம் தற்போது 4 படங்கள் உள்ளனவாம்.