திதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை

தன் மீது நடிகை அதிதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை என்று நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார். 
தாம் அதிதியை மிரட்டியதாகக் கூறப்படுவதும் பொய்யான தகவலே என்று அவர் கூறியுள்ளார். 
தனக்கும் அபி சரவணனுக்கும் திருமணமானதாகக் கூறப்படுவதை அதிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அபி போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளதாக அதிதி கூறியுள்ளார். 
இதையடுத்து அபி சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அபி சரவணனும் தன் பங்குக்கு நேற்று பத்திரி கையாளர்களைச் சந்தித்து, தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்தார். 

அப்போது 3 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் அதிதிக்கும் திருமணமாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த 2016 ஜூன் மாதம் எனக்கும் அதிதிக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. மூன்றாண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். இந்நிலையில் நான் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டிலுள்ள பீரோ, சூட்கேஸ் ஆகியவற்றை உடைத்து அவற்றில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் அதிதி. 

“எனவே, அவரை என்னுடன் சேர்த்து வைக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன்,” என்றார் அபி சரவணன். 
தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று குறிப்பிட்ட அவர், அதிதி பிரிந்து சென்றதும் உட னுக்குடன் இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களுக்குத் தகவல் தெரிவித்த தாகக் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்