காவல்துறை அதிகாரியாக கதிர் நடிக்கும் ‘சத்ரு’

கதிர் நாயகனாக நடிக்கும் படம் ‘சத்ரு’. அவரது ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காதாம். நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் இளையர்களைக் கவரும் வகையில் இப்படம் உருவாகிறது. “தலைமறைவாக வாழும் குற்றவாளிகள் ஐந்து பேரை துணிச்சல்மிக்க இளம் காவல்துறை அதிகாரி 24 மணிநேர அவகாசத்துக்குள் எவ்வாறு கைது செய்கிறார் என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர் நவீன்.