தன்முனைப்பு இசைக் காணொளியை வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை நிறுவனம் மூலம் தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி நல்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆக அண்மையில், தற்கொலைக்கு எதிரான இயக்கம் ஒன்றுக்கு அவர் ஆதரவு தருகிறார். ‘கடிதம்’ என்ற இசைக் காணொளியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

இந்தியாவில் தேர்வு நேரம் நெருங்கி வர, மன உளைச்சலைச் சமாளிக்க இயலாமல் திணறும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும் இந்தக் காணொளி அமைந்துள்ளது.
சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா சுந்தர் இதனைப் பாடியிருக்கிறார்.