பிரியா: நண்பர் காதலராகலாம்

‘எல்கேஜி’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த். பலத்த வரவேற்புடன் இப்போது திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் அரசியல் சாணக்கியத்தனம் அறிவுபூர்வமாகப் பின்னப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் பாராட்டி மதிப் பீடுகளை வழங்கி வருகின்றன.
இந்தப் பாராட்டு மழையால் உற்சாகம் அடைந்துள்ள படத்தின் நாயகியான பிரியா ஆனந்த், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். 
“ஆறு மாதத்திற்கு ஒரு படம் வரவேண்டும். என்னை எப்போவும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று  நினைக்கும் நடிகை கிடையாது நான். வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்தாலும் எதிர்காலத்தில் அதை நினைத்து திருப்தியாக இருக்கவேண்டும்,” என்று  பேசத் தொடங்குகிறார் பிரியா ஆனந்த்.

“நானும் கௌதம் கார்த்திக்கும் நண்பர்களாகத்தான் பழகிவருகிறோம். கௌதமுடன் சில படங்களில் நடித் துள்ளேன். எங்கள்  இருவருக்கும் இடையே காதல் இருப் பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 
“நண்பர் காதலராக மாறலாம். காதல் நண்பராகவும் மாறலாம். கௌதம் என் நண்பரா, காதலரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்,” என்று கூறும் பிரியா ஆனந்த், வருகிற 25ஆம் தேதி வரை பொறுத் திருங்கள் உண்மைகளை எல்லாம் புட்டுப் புட்டு வைத்துவிடுகிறேன்,” என்றும் பீடிகை போடு கிறார்.
“எல்கேஜி’ படத்தில் அரசியலில் எப்படி செயல்படவேண்டும் என்பதை பாலாஜிக்குச் சொல்லிக்கொடுக்கும் பாத்திரத்தில் நடித் துள்ளேன். படத்தில் யாரைப் பற்றி பேசு கிறேன் எனத் தெரியாமலேயே வசனம் பேசியுள்ளேன். 
“தமிழில் இந்த இயக்குநர், நடிகருடன் தான் பணியாற்றவேண்டும் என நினைப் பதில்லை. புது இயக்குநர்கள் நல்ல கதையோடு வருகின்றனர். கதை பிடித் திருந்தால் நடிகர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டேன்; யாருடன் வேண்டு மானாலும் நடிப்பேன்.

“ஷங்கரிடம் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தியா வந்தேன். நடிக்கவந்த பிறகு இயக்கு நராகும் ஆசை போய்விட்டது. தமிழ்த் திரையுலகில் இப்போதுள்ள நிலைமையில் மற்ற பணிகளை விடவும் நடிப்பதுதான் எளிதாக இருக்கிறது.
“இதற்கு முன் தமிழில் மட்டுமே நடித்தேன். இப்போது மலையாளம், இந்தியில் நடிக்கிறேன். அதனால், ஒவ்வொரு மொழியிலும் இடைவெளி ஏற்படுகிறது. எனக்கு நிஜமாகவே அரசியல் பற்றி தெரியாது. மற்றபடி, அரசியலில் எனக்கு ஜெய லலிதாவை ரொம்பப் பிடிக்கும்,” என்கிறார் பிரியா ஆனந்த். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்