தனது விடாப்பிடி கொள்கையைத் தளர்த்திக்கொண்ட ஜெய்

அஜித் வழியில் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் என்பதை விடாப்பிடி கொள்கையாகவே வைத் திருந்தார் ஜெய். அத்துடன் அஜித் போலவே ஊடகச் செய்தியாளர்களைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் திடீரென ஊடகச் செய்தி யாளர்களைச்  சந்தித்த ஜெய், தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டுவிட்டதாக அறிவித்தார்.
அவருடைய நடிப்பில் ‘நீயா-2’, ‘பார்ட்டி’, ‘கருப்பர் நகரம்’ ஆகிய படங்கள் தயாராகிவரும் இந்நேரத்தில் ஜெய்யின் மாற்றம் அவருக்குப் பலனைக் கொடுக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, உண்மையிலேயே ஜெய் மாறி விட்டாரா என்ற சந்தேகமும் இருந்துவந்தது.
இந்நிலையில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற படத்தின் பூசை நேற்று முன்தினம் காலை சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் நாயகியாக பானு நடிக்கிறார். கன்னடப் படங்களில் நடித்துப் பிரபல மான இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
இவர்களுடன் தேவ்கில், ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்த ராகுல்தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகர், பழ கருப்பையா, ராதாரவி ஆகியோரும் நடிக் கிறார்கள்.

இந்தப் படத்திற்கு விஷால் பீட்டர் இசை அமைக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்கத்தை மகேஷ் கவனிக்கிறார். 
சண்டை காட்சிகளை ‘ஸ்டன்னர்’ சாம் அமைக்கிறார். ‘ராகுல் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.திருக்கடல் தயாரிக்கும் இந்தப் படத்தின்
‘பிரேக்கிங் நியூஸ்’ படத் துவக்கவிழாவுக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே முன்னிலை யான ஜெய், படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியதோடு அதன்மூலம் தன்னுடைய மாற்றத்தையும் உறுதிப்படுத்தினார். ஜெய்யிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் அவருக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்பலாம் என்கின்றனர் படக்குழுவினர். 
இதற்கிடையே வளர்ந்து வரும் நடிகர் ஜெய் இளைய தளபதி விஜய் சொன்ன வார்த் தையால்தான் தன் வாழ்க்கையே மாறி யுள்ளதாகத்  தெரிவித்துள்ளார். 
ஒருமுறை ‘பகவதி’ படத்துக்குப் பின் மீண்டும் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது, அவர் எனக்கு ஒரு முக்கியமான அறிவுரை கூறினார். அதில், இனியும் துணை நடிகராக நடிக்காமல் கதாநாயகனாக நடிக்கும்படி கூறினார்.
அவரின் அறிவுரைக்குப்பின் நான் நடித்த படம்தான் ‘சுப்பிரமணியபுரம்’. அதற்குப்பின் ‘ராஜா ராணி’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘அவள் பெயர் தமிழரசி’ உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்று மனதிருப்தியைத் தந்துள்ளன என்று கூறியுள்ளார் ஜெய்.