ஷாலினி வருகையால் கலக்கத்தில் முன்னணி நடிகைகள்

‘கொரில்லா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஷாலினி பாண்டே. இவரது வருகை தமிழ்த் திரையுலகில் கோலோச்சி வரும் பல முன்னணி நடிகைகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்ஜுன் ரெட்டியின் படத்தில் விஜய தேவரகொண்டாவின் ஜோடியாக நடித்து, தெலுங்கு திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியவர் ஷாலினி பாண்டே. இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100 விழுக்காடு காதல்’ திரைப்படத்தின் வாயிலாகத் தமிழிலும் அடியெடுத்து வைத்துள்ளார். “ஏற்கெனவே ‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளேன். ஆனாலும் நேரடி தமிழ்ப் படம் என்ற வகையில் ‘100 விழுக்காடு காதல்’ படம்தான் எனக்கு முதல் தமிழ்ப் படம். தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு தந்தது போல் தமிழ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்,” என ஷாலினி கூறியுள்ளார்.