குத்துச்சண்டை வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்போது மற்றொரு படத்தில் குத் துச்சண்டை வீராங்கனை யாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். கிராமத்துப் பெண்ணான இவர்  அனைத்துலக குத்துச்சண்டை போட்டியில் பங் கேற்று வெற்றி பெறுவதே கதை.
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் வரு கின்றன. விளையாட்டு வீரர்கள் வாழ்க்கைக் கதைகளும் படமாகின்றன. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘கனா’ படம் வந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங் கனையாக நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை நிகழ்த்தியது. 
இந்நிலையில் நாயகிக்கு முக் கியத்துவம் தரும் புதுப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையாக         கஜினி வில்லன் பிரதீப் ராவத் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.