கோடி ராமகிருஷ்ணா இயற்கை எய்தினார்

பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் நேற்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.
சுமார் 37 ஆண்டுகள் தெலுங்குத் திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கோடி ராமகிருஷ்ணா சுமார் 200           படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களையும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணா இழப்பால் தெலுங்குத் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கோடி ராமகிருஷ்ணா படங்களை இயக்கியதோடு வெற்றிகரமான நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா நடிப்பில் இவர் இயக்கிய அருந்ததி படமும் தமிழ், ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. இந்நிலையில் சமீப காலமாகவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த கோடி ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்