இனியா: இனி குத்தாட்டமே கிடையாது

இனி வரும் படங்களில் சராசரி கதாநாயகிபோல் தம்மால் நடிக்க முடியாது என்கிறார் இனியா. 
இனி, வித்தியாசமான கதாபாத்தி ரங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் ‘குக்குரு’ எனத் தொடங்கும் பாடலுக்கு நடனமாடியுள்ளார் இவர். 
இதையடுத்து குத்துப்பாடலுக்கு நடனமாடுமாறு கேட்டு பலரும் அவரை அணுகியுள்ளனராம். இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் இனியா.
“இயக்குநரின் விருப்பத்தின் பேரில் அந்தப் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டேன். வண்ணமயமான சூழ்நிலையில் அமைந்த அந்தப் பாடலுக்கு நடன ஆசிரியர் பிருந்தா அழகாக நடனம் அமைத்திருந்தார். அந்தப் பாடல் சிறப்பாக உருவானதில் மகிழ்ச்சி. 
“எனினும் அதற்குப் பிறகு குத்துப் பாடல்களுக்கு ஆடக்கூடாது என உறுதியான முடிவை எடுத்துள்ளேன்,” என்பதே இனியாவின் விளக்கம். ‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது ‘காபி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அதிரடிச் சண்டைக் காட்சிகளும் உண்டாம்.