தமிழ் சினிமாவிலும் மற்றொரு புது முயற்சி

தமிழ்ச் சினிமாவில் அண்மைக் காலமாக புதிய, வித்தியாசமான முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் வார இதழ் ஒன்றில் வெளியான சிறுகதையை ஒரே காட்சியின் மூலம் முழுநீளத் திரைப்படமாக உருவாக்கி உள்ளார் தமயந்தி. ‘தடயம்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதன் கதையை எழுதியதோடு, இயக்கியும் உள்ளார் தமயந்தி. 
தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட தரமான படைப்பாளி களில் இவரும் ஒருவர். இயக் குநர்கள் சமுத்திரகனி, மீரா கதிர வன், பரத் பாலா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் உண்டு. 
இந்தியச் சமூகத்தில் மலிந்து கிடக்கும் காதல் இல்லாத திரு மணங்களினூடே, ஒரு திரு மணமில்லாத காதல் பற்றிய திரைப்படம்தான் ‘தடயம்’ என்று ஒற்றை வரியில் விவரிக்கிறார் தமயந்தி.
“பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள இயலாத, உடலை வைத்து அறத்தை மதிப்பீடு செய்கிற ஓர் ஆணின் மனதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுக்கையில் வாழ்ந்து கொண்டி ருக்கும் கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழை நாளில் சந்திக்கிறான்.  அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றைச் சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதை வாயிலாக தாள பரவசங்களின் காட்சிப் படி மங்களாக மாற்றித் தரும் படைப்பு இது,” என்கிறார் தமயந்தி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்