தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி உடல்நலக்குறவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
விஜய், சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் இரு நாயகி களில் ஒருவராக  திரையில் தோன்றி யவர்  நடிகை விஜயலட்சுமி. கடைசி யாக ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத் தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். 
பட வாய்ப்புகள் குறைந்ததாலும், உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வந்தவருக்கு உயர் ரத்த அழுத்தம் பெரும் தொல்லையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதையடுத்து பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் விஜய லட்சுமிக்கு தமிழ்த் திரையுலகினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
“கையில் இருந்த பணம் எங்கள் தாயாரின் சிகிச்சை செலவுக்கே சரி யாகி விட்டது. மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் உள்ளோம்,” என்றும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார். 
கடந்த 2007ஆம் ஆண்டு விஜயலட்சுமிக்கு நடக்க இருந்த திருமணம் திடீரென ரத்தானது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

 ‘ரீல்’ படத்தில் கேரளாவைச் சேர்ந்த உதயராஜ், அவந்திகா. படம்: ஊடகம்

23 Aug 2019

‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அமைந்தது’

‘கர்ஜனை’ முன்னோட்டத் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என திரிஷா கேட்டுக்கொள்ள மறுக்காமல் உதவியுள்ளார் விஜய் சேதுபதி. படம்: ஊடகம்

23 Aug 2019

திரிஷாவுக்கு உதவிய சேதுபதி