நகைச்சுவை கலந்த காதல் படம் - ‘இஸ்பேடு ராஜாவும் காதல் ராணியும்’

‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படம் மார்ச் 15ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இதில் ஹரிஸ் ஜோடியாக ‌ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மா.கா.பா. ஆனந்த், பாலசரவணன் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி இருக்கும் இதன் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற் றுள்ளது. சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். 
ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ள இந்தப் படம் வெளியானதும் தமக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறாராம் ஹரிஷ் கல்யாண்.
மேலும் இந்தப் படம் இளையர்களை வெகுவாகக் கவரும் என்றும், அதற்கேற்ப காதல் உணர்வை இதில் அழகாக வெளிப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.