திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் இந்தியில் வெளியான 'பிங்க்' படம்தான் டாப்ஸியின் தலையெழுத்தைத் தீர்மானித்தது எனலாம். அதில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. ஒரே சமயத்தில் 8 படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்துக் கிடந்தனராம். "சினிமா பின்னணி இருப்பவர்களுக்கு சில விஷயங்கள் சுலபமாகக் கைகூடும். மற்றவர்களுக்கு அப்படி அல்ல. எங்கே நாம் நடித்த படம் தோல்வி அடைந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்களோ எனும் அச்சத்துடனேயே நாட்களை நகர்த்த வேண்டி இருக்கும். "ஆனால் 'பிங்க்' வெளியான பிறகு அத் தகைய பிரச்சினைகள் எனக்கு இல்லை. "அதனால்தான் சொல்கிறேன் நமக் கான நேரம், காலம் அமைய வேண்டும். நம் திறமையைக் காட்ட சிறிய நுழை வாயில் கிடைத்தா லும் போதும். அதைப் பயன்படுத்தி விரும்பிய இடத்தில் காலூன்றி விடலாம். "அதன் பிறகு யாராலும் நம்மைப் பின்னுக்குத் தள்ள முடியாது," என்கிறார் டாப்ஸி. இந்நிலையில் இவருக்குத் திருமணம நடக்க இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் பரவியது. அது குறித்துக் கேட்டால் பெரிதாகச் சிரிக்கிறார். "ஊடகங்களைப் பொறுத்தவரை தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அண்மைய செய்தி என்று ஏதாவது ஒன்றை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகப் போட்டி காரணமாக எந்தச் செய்தி உண்மை, எது பொய் என்பதை உறுதி செய்யாமல் வெளியிடும் போது வதந்திகளுக்கும் முக்கிய இடம் கிடைத்து விடுகிறது. "சமூக வலைத்தளங்களில் கூட பலர் எனக்குத் திருமண வாழ்த்துச் சொல்லி எரிச்சலை ஏற்படுத்தினர். உண்மையில் திருமணம் குறித்து நான் இப்போது யோசிக்கவே இல்லை. மனதளவில் அதற்குத் தயாராகவில்லை. "தவிர இப்போதுதான் சவாலான கதா பாத்திரங்கள் தேடி வருகின்றன. சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது. என்னை நான் நிரூபித்தாக வேண்டும். இவையெல்லாம் நடந்த பிறகுதான் திருமணம் குறித்து யோசிக்க முடியும். "அது மட்டுமல்ல, நமக்கு பிறக்கும் குழந்தைகளை நம்மால் நல்லபடியாக வளர்க்க முடியும், குழந்தைகளுக்கான நேரத்தைச் செலவிட முடியும் எனும் நம்பிக்கை என் மனதில் நிறைந்திருக்கும் போதுதான் திருமணம் குறித்து யோசிப்பேன்," என்று சொல்லும் டாப்ஸி, தனது சம்பாத்தியத்தின் மூலம் மும்பையில் புது வீடு வாங்கியுள்ளார். அதில் தற்போது உள் அலங்கார வேலை கள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் சுவர்ப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்துகிறாராம்.
என்னை நிரூபிக்கவேண்டும் - டாப்ஸி
2 mins read
-

