சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘கிரீன் புக்’

இவ்வாண்டின் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘கிரீன் புக்’ தட்டிச் சென்றுள்ளது. 1960களில் இனப் பாகுபாடு நிறைந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் கறுப்பினத்தவரான ‘பியானோ’ கலைஞருக்கும் அவரது வெள்ளைக்கார ஓட்டுநருக்கும் இடையே ஏற்படும் நட்பை இந்தப் படம் சித்தரிக்கிறது.

படத்தில் நடித்த மஹர்ஷலா அலி, சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார். சிறந்த சுய திரைக்கதை (original screenplay) விருதையும் இந்தப் படம் தட்டிச் சென்றது.

“இந்தப் படம் அன்பு பற்றியது. வேறுபாடுகள் இருந்தபோதும் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதை இந்தத் திரைப்படம் காட்டுகிறது,” என்று  திரைப்படத்தின் இயக்குநர் பீட்டர் ஃபர்ரெல்லி தெரிவித்தார்.