ரசிகர்களை வருத்தப்பட வைத்த நடிகை

‘கொடி’ படத்தில் தனு‌ஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அனுபமா என்றதுமே அவரது நீண்ட கூந்தல்தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் கூந்தலின் முக்கால்வாசிப் பகுதியை அவர் வெட்டிவிட்டாராம். கூடவே தன்னைத்தானே படம்பிடித்து அதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
அனுபமாவின் நீண்ட கூந்தலை மிகவும் மெச்சிய கூட்டாளிகளும் ரசிகர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“உங்களுக்குக் கூந்தல்தான் அழகு எனப் பலமுறை சொல்லியும் இப்படிச் செய்வது நியாயம்தானா?” என்று பலரும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.