மூன்று படங்களில் ஒப்பந்தமான ரவி

அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்துவரும் ஜெயம் ரவி, தற்போது மூன்று படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகி உள்ளார். 
இவை அனைத்தையும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தரமான கதைகளைத் தேர்வுசெய்து படம் எடுத்து வருவதாக ரவி பாராட்டியுள்ளார். 
“இந்நிறுவனத்தின் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அவர்களுடைய இந்த நீண்ட பயணத்தில் ஓர் அங்கமாகச் செயல்பட என்னையும் தேர்வு செய்ததற்கு நன்றி. இத்தகைய நிறுவனங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரம்,” என்றார் ஜெயம் ரவி.
தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்தப் படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.