இளம் காதல் ஜோடியின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது ‘ரீல்’

புதுமுகங்கள் உதயராஜ், அவந்திகா நடிக்கும் படம் ‘ரீல்’. முனுசாமி இயக்குகிறார். இவர் பல இயக்குநர்களிடம் உதவியாள ராகப் பணியாற்றியவர்.
படத்தின் தலைப்பைக் கேட்ட தும் ரசிகர்களை ஏமாற்றப் போகி றீர்களா என்று கிண்டல் செய்கி றார்களாம். ஆனால் யார் காதிலும் பூ சுற்றும் எண்ணம் தமக்கில்லை என்கிறார் முனுசாமி. 
உணர்வுபூர்வமான ஒரு நல்ல கதையை இந்தப் படத்தில் விவரித்துள்ளாராம். காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை என ரசிகர்களைத் திருப்திபடுத் தும் அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன வாம்.
“படத்தின் நாயகன் பெற்றோர், குடும்பத்தார் என யாருமில்லா தவர். வாழ்க்கைமீது குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எத்தகைய பிடிப்பும் இல்லாத நாயகன் சாப் பாட்டுக்கே அல்லாடுபவர். 
“இதனால் சின்னச் சின்னதாக சில்லறைத் திருட்டு வேலைகளில் ஈடுபடுவார். இந்நிலையில் நாயகி தன் குடும்பச் சூழ்நிலை காரண மாக சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் அவர் ஒரு பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடுகி றது. அங்கு நாயகனும் நாயகியும் சந்தித்துக்கொள்கின்றனர். 
“அதன் பிறகு இருவரது வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்பதை உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் முனுசாமி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’