ஜனனி ஐயரின் காதல் அனுபவங்கள்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு அசோக் ஷெல்வனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் ஜனனி ஐயர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பவர், அந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் தாம் பிரபலமாகி விட்டதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார். 
இந்நிலையில் தனது காதல் அனுபவம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜனனி. சென்னையில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். முதலாம் வகுப்பு படிக்கும்போதே சக மாணவன் ஒருவன் இவரிடம் காதல் கடிதம் அளித்திருக்கிறான். அதைக் காதல் கடிதம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனெனில் எடுத்த எடுப் பிலேயே என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தானாம் அந்தச் சிறுவன். 
“காதல் என்றால் என்னவென்றே புரியாத அந்த வயதில் ஏதோ ஒரு திரைப்படத்தைப் பார்த்துதான் அவன் ஆர்வக் கோளாறில் அப்படி எழுதயிருக்க முடியும். அந்த வயதில் காதல் என்றால் ஒரு கெட்ட வார்த்தை என்பதுதான் என் எண்ணம். அதனால் அந்தக் கடிதம் குறித்து ஆசிரியையிடம் உடனே சொல்லிவிட்டேன். 

“அவ்வளவுதான் அந்தப் பையனைப் பயங்கரமாக ஏசிய அவர், வகுப்புக்கு வெளியே நிற்க வைத்து விட்டார். இப்போது அதை நினைத்தால் வருத்தமாக வும் அந்த மாணவன்மீது பரிதாபமாகவும் இருக்கி றது,” என்கிறார் ஜனனி. 
இவரது மனம் கவர்ந்த நாயகன் என்றால் அது அஜித் என்கிறார். பொறியியல் கல்லூரியில் படித்த போது கலைப் பிரிவுக்கான செயலராக பொறுப் பேற்றிருந்தாராம். அந்தச் சமயத்தில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அஜித்தைதான் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் சக மாணவர்களின் கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறார். எனினும் இன்றுவரை அஜித்தை ஒரு முறைகூட நேரில் சந்தித்தது இல்லையாம்.
“கல்லூரியில் படித்தபோது எனக்கு யார் மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. யாரையும் காதலிக்கும் அளவுக்கு முதிர்ச்சி இருந்ததாகவும் கருத வில்லை. 
“அதுமட்டுமல்ல, யாரேனும் என்னை அணுகி காதலைத் தெரிவித்தால் அதை ஏற்கவும் நான் தயாராக இல்லை. இதையெல்லாம் மீறி என்னை அணுகியவர்களிடம் நண்பர்களாகவே இருந்து விடலாமே என்று சொல்லிப் பலமுறை தவிர்த் திருக்கிறேன்,” என்று அனைத்தையும் வெளிப் படையாகப் பேசும் ஜனனி, ‘காதல் முறிவு?’ என்று கேட்டால் மட்டும் அதுகுறித்து பேச வேண்டாம் என்கிறார். 
“கடந்து போன விஷயங்கள் குறித்து எதற் காகப் பேச வேண்டும். முடிந்துபோன விஷயங்கள் குறித்து எந்தச் சூழ்நிலையிலும் நினைக்கக் கூடாது, பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார் ஜனனி. தனக்கு நெருக் கமானவர்களிடம் இதை ஓர் அறிவுரையாகவே சொல்வது ஜனனியின் வழக்கமாக உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்