தமிழ் ரசிகர்களின் ஆதரவு வேண்டும் - நிவேதா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார் நிவேதா பெத்துராஜ். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியவர் விஜயசந்தர். இவர் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார்.
இதையடுத்து, கதாநாயகி ரா‌ஷி கன்னாவும் இவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
விவேக், மெர்வின் இருவரும் இசை அமைக்கின்றனர். மார்ச் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நிவேதா பெத்துராஜும் இணைந்துள்ளார்.
இவருக்கும் ரா‌ஷி கன்னாவுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என இயக்குநர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாம். இதனால் உற்சாகத்துடன் தேதிகளை ஒதுக்கியுள்ளார் நிவேதா பெத்துராஜ். 
“தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்குத் தகுந்ததுபோல் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது,” என்கிறார் நிவேதா பெத்துராஜ்.