சீனாவில் படமாக்கப்பட்ட 'எங் மங் சங்' சண்டைக் காட்சிகள்

சீனாவில் படமாக்கப்பட்ட 'எங் மங் சங்' சண்டைக் காட்சிகள்

1 mins read
bae10693-9af2-4f40-806e-d483d764ab31
-

பிரபுதேவா, லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'எங் மங் சங்'. அர்ஜுன் இயக்கும் இப்படத்தில் தங்கர்பச்சான், ஆர்.ஜே. பாலாஜி, சித்ரா லட்சுமணன், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கெனவே கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் படிப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவில் உள்ள டெங் லெங் என்ற இடத்தில் மிகுந்த பொருட்செலவில் அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் பிரபுதேவா வில்லனுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. சீனாவின் தற்காப்புக் கலைகளைக் கொண்டு சண்டைப் பயிற்சியாளர் சில்வா அதிகம் மெனக்கெட்டு இந்த சண்டைக் காட்சிகளை அமைத்ததாக இயக்குநர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.