சிவா படத்தில் நடிக்கும் இவானா

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதையடுத்து மித்ரன் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்க உள்ளார் சிவா. 
இப்படத்தை இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. நாயகியாக கல்யாணி பிரியதர்ஷனை ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்னொரு நாயகியாக இவானாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவரைத் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. 
பாலாஜி இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் இவர்தான் ஜி.வி. பிரகாசுக்கு ஜோடி. சிவாவுடன் இணைந்து நடிப்பது உற்சாகமளிப்பதாகச் சொல்லும் யுகானா மார்ச் மத்தியில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.