இரு முத்தக் காட்சிகளில் நடிக்க மறுத்த கதாநாயகி

‘கொம்பு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள படத்தை இயக்கியுள்ளார் இப்ராகிம். தமிழ்ச் சினிமாவின் அதிர்ஷ்ட இயக்குநர்களின் பட்டியலில் இவருக்கு நிச்சயம் இடம் கொடுக்கலாம். 
ஏனெனில், முதல் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி உள் ளார். அதற்குக் கைகொடுத்ததும் ‘கொம்பு’தான். 
இப்படத்தைப் பார்த்த தயாரிப்பா ளர்கள் உடனடியாக இப்ராஹிம் கையில் முன்பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ள னர். தான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி உள்ளார் இப்ராகிம். 
“மதுரையில் ஒரு மாட்டுக் கொம்பின் உள்ளே ஆவிகள் புகுந்திருப்பதாக ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் நம்புகிறர்கள். இது குறித்து ஆராய்ச்சி செய்ய கதா நாயகி அந்த ஊருக்கு வருகிறார். அங்கு வசிக்கும் நாயகன் அவ ருக்குத் தன்னால் முடிந்த உதவி களைச் செய்கிறார். இதையடுத்து நடக்கும் சில சம்பவங்கள் கல கலப்பாகவும், எல்லோரும் ரசிக்கும் விதமாக படமாக உருவாக்குகி றோம். “இதில் ஜீவா நாயகனாக நடிக் கிறார். ரஜினி ஜீவா என்று சொன்னால் எல்லோருக்கும் சுலபமாக இவர் முகம் நினைவுக்கு வரும். அடிப்படையில் ஜீவாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. அதனால் அவர் படப் பிடிப்பில் இருந்தால் எப்போதும் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ‘தமிழ்ப் படம்’ திஷா பாண்டே நாயாகியாக நடித்துள் ளார்,” என்கிறார் இப்ராகிம். 

நாயகியிடம் தொலைபேசி மூ லமாகத்தான் கதையை விவரித்தா ராம். மேலோட்டமாக கேட்ட உடனேயே மிக நல்ல கதை என்று பாராட்டிய திஷா மறுநாளே மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டாராம். 
“பிறகு முழுக் கதையையும் கேட்டு விட்டு வெகுவாகப் பாராட்டி னார். படத்தில் இவருக்கும் ஜீவா வுக்குமான காதல் காட்சிகளில் இருவரது உடல்மொழியும் பிரமாத மாக அமைந்துள்ளது. இரு முத்தக் காட்சிகளும் உள்ளன,” என்று கண்ணடித்துச் சிரிக்கிறார் இப்ரா கிம். இதுகுறித்து நாயகியிடம் முன் கூட்டியே விவரம் தெரிவிக்கவில் லையாம். அதனால் படப்பிடிப்பின் போது திஷா அதிருப்தியுடன் இருந்துள்ளார். காட்சி படமாக் கப்பட்டபோது மிகவும் தயங்கினா ராம். அதன்பிறகு காட்சியின் அவசியத்தை எடுத்துக் கூறியதும் நடித்துக் கொடுத்திருக்கிறார். 

“முத்தக் காட்சி இருப்பதால் படம் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதாக நினைக்க வேண் டாம். இது பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத் தும் படமாக இருக்கும். பாண்டிய ராஜன், கஞ்சா கறுப்பு, ஸ்மிதா, காயத்ரி என்று மேலும் பல நட்சத்திரங்கள் உள்ளனர். எல்லோ ருமே முழு ஈடுபாட்டுடன் பணி யாற்றினர். இதற்காக படக் குழுவுக்கு நன்றி சொல்ல வேண் டும். 
“இந்தப் படத்துக்கு தேவ் குரு இசையமைத்துள்ளார். இந்தியில் இசையமைத்த படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதாம். திரையுலகில் தான் இந்தளவு முன்னேறி வருவ தற்குக் கைகொடுத்தது தனது நண்பன் ஜோ என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் இப்ராஹிம்.