‘தமிழரசன்’: விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன்

விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா நம்பீசன். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார் விஜய் ஆன்டனி. படத்தின் லாபம் வசூலுக்கெல்லாம் அடுத்த இடம்தான். இந்நிலையில், ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை அடுத்து கொலைகாரன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ உள்ளிட்ட 3 படங்க ளில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆன்டனி. இதில் ‘தமிழரசன்’ படம் பாபு யோகீஸ்வரன் இயக் கத்தில் உருவாகிறது. படத்துக்குப் பூசை போட்ட கையோடு படப்பிடிப்பை துவக்கிவிட்டனர். ஆனால் கதாநாயகியை மட்டும் ஒப்பந்தம் செய்யவில்லையாம். கடந்த சில தினங்களாக கதைக்கேற்ற சில நாயகி களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியில் ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து
உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் ரம்யா. அவரும் விஜய் ஆன்டனியும் இணைந்து நடிக்கும்
காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனிஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவும் நடிக்கின்றனர்.