அண்ணன் திருமணத்தை தடுக்கும் தம்பி

வித்தியாசமான தலைப்புகளைப் படங்களுக்குச் சூட்டிக் கோடம் பாக்கத்தைத் திரும்பி பார்க்க வைப்பதே முதல் வெற்றி என்று இன்றைய இளம் அறிமுக இயக்குநர்கள் கருதுகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகுமார் இயக்கும் படத்துக்கு ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 
பெரும் பணக்காரராகவும் உள்ளூரில் ஆதிக்கம் செலுத்து பவராகவும் வலம் வருகிறார் ஒரு பெரியவர். அண்ணன் தம்பிகளாக உள்ள தனது 3 பேரன்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். 
எனினும் தன் பேரன்களைப் போலவே உடன்பிறந்த அக்கா தங்கைகளாக உள்ள 3 பெண் களுக்குத்தான் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அப் படி யாரும் கிடைக்காத பட்சத்தில் தனது சொத்துக்கள் அனைத்தை யும் ஊர்க் கோவிலுக்கு எழுதி வைப்பது என்றும் முடிவு செய்கிறார். 

“கதநாயகனின் இரு அண் ணன்களும் காதல் வயப்படுகி றார்கள். கதாநாயகனுக்குக் காதலி அமையவில்லை. இதனால் தனது அண்ணன்களின் திரு மணத்தைப் பலவிதமாகத் திட்ட மிட்டுத் தடுக்கிறார். 
“இந்நிலையில் நாயகனுக்கும் காதல் கைகூடுகிறது. ஆனால் இம்முறை அவரது திருமணத்தை அண்ணன்கள் இருவரும் தடுக்கி ன்றனர். தாத்தா எதற்காக சொத் துக்களை எழுதி வைக்க இப்படி ஒரு நிபந்தனையை விதிக்கிறார்? பேரன்களுக்கு அவரது சொத்துக் கள் கிடைக்கின்றனவா? என் பதை ஜாலியாகவும் நகைச்சுவை யாகவும் சொல்லியிருக்கிறேன்,” என்கிறார் கிருஷ்ணகுமார். 

இதில் நாயகனாக கிரிஷ், நாயகிகளாக நேகா, மணாலி ரத்தோர் நடித்துள்ளனர்.  வல்ல வன் இசையமைப்பில் 5 பாடல்களும் அருமையாக அமைந்துள்ளதாம்.
“படத்தின் தலைப்பு தொடர் பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழில் ஒரே ஒரு வார்த்தையைத் தவறாக உச்சரித் தாலோ, ஒரு வார்த்தையில் சொல்லத் தவறிவிட்டாலோ அது பெரும் தவறாகிவிடும் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். ஏன் இந்த தலைப்பு வைத்தி ருக்கிறேன் என்பது படம் பார்க் கும்போதுதான் புரியும்,” என்கி றார் இயக்குநர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்