நடிகை வெளியிட்ட படத்தால் சலசலப்பு

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
அதுமட்டுமல்ல, ராணாவின் இளைய சகோதரர் அபிராமுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இரு படங்களுக்கும் கீழே அவர் பதிவிட்டுள்ள சில வரிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ராணாவின் தந்தை சுரேஷ் பாபு பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறார். ஆனால், தனது மகன்களை ஒழுங்காக வளர்க்க அவருக்குத் தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருந்தார். பேரன்களும் அவரைப் போலவே உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. 
முன்பு திரிஷாவும் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. ஆனால் இருவருமே அதை மறுத்திருந்தனர். இந்நிலையில் இருவரும் நெருக்கமாக உள்ள படம் வெளியானதால் சலசலப்பு  ஏற்பட்டுள்ளது. 2019-02-28 06:00:00 +0800