எல்கேஜி பட வருமானத்தில் மக்களுக்கு உதவும் பாலாஜி 

‘எல்கேஜி’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறார் ஆர்ஜே பாலாஜி.  இந்தப் படத்தில் இருந்து தனக்கு வரும் வருமானத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களில் இருக்கும் பத்து அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அதை மேம்படுத்த உள்ளதாக பாலாஜி அறிவித்துள்ளார். 
ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த ‘எல்கேஜி’ திரைப்படம், திரை யரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து படக்குழுவினர் நேற்று இந்த வெற்றியைக் கொண்டாடினர். 
அப்போது பேசிய பாலாஜி, தன்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி கூறினார். அத்துடன் 10 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மேம்படுத்த உள்ளேன். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட நாயகனான எனக்கு 310 திரையரங்குகள் கிடைத்திருப்பதும் அதில் படம் வெற்றி கரமாக ஓடிக்கொண் டிருப்பதும் மகிழ்ச்சி என்ற ஆர்ஜே பாலாஜி, அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.