‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ படத்தில் புதுமுகங்கள்

இப்போது எல்லாம் குழந்தை களுக்குப் பெயர் வைப்பதுபோல்  திரைப்படங்களுக்கும் என்ன பெயர் வைப்பது என குழம்பிப் போகின்றனர். பழைய படங்களின் தலைப்பு அல்லது நடிகர்களின் வசனத்தை படங்களுக்கு தலைப்பாக வைப்பது அதிகரித்து வருகிறது. 
புதிய படம் ஒன்றுக்கு ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ என தலைப்பு  வைத்துள்ளார்கள். இந்த வசனத்தை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதே என்று பலரும் யோசிக்கக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் படங்கள் தொடங்குவதற்கு முன் புகை பிடிப்பது பற்றிய எச்சரிக்கை விளம்பரம் வரும். அதில் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, புகையும் சாம்பல் மேடுகளும் என்று அந்த வசனம் ஒலிக்கும். அந்த வசனத்தை புதிய படத் துக்கு தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் செந்தில்குமார். பூக் கடை ஜி.சேட்டு தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்